நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக கூட்டத்தில் தீர்மானம்! – இளைஞரணி முடிவு!

Webdunia
ஞாயிறு, 4 ஜூலை 2021 (12:15 IST)
மத்திய அரசின் நீட் நுழைவு தேர்வு, ஒளிப்பதிவு திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் சூர்யாவுக்கு எதிராக பாஜக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நீட் தேர்வுக்கு எதிராக தமிழகமெங்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யாவும் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அதேபோல சமீபத்தில் திரைப்படங்களுக்கான ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராகவும் சமீபத்தில் நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக பேசி வரும் நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக மாநில இளைஞரணி செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்