சினிமாவில் சாதித்துவிட்டு அரசியலில் சாதிக்கலாம் என நினைப்பது தவறு: எச்.ராஜா

Mahendran
சனி, 2 நவம்பர் 2024 (12:24 IST)
சினிமாவில் சாதித்துவிட்டு விட்டு அரசியலில் சாதிக்கலாம் என நினைப்பது தவறு என பாஜக பிரமுகர் எச். ராஜா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் எச். ராஜா தனது குடும்பத்துடன் தா. சாமி தரிசனம் செய்தார். 
 
அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, "சினிமாவில் பிரகாசித்து விட்டு அரசியலை சாதிக்கலாம்" என நினைப்பது தவறு என்றும், இதை மக்கள் பலமுறை உணர்த்தியுள்ளனர் என்றும் விஜய் குறித்து மறைமுகமாக அவர் கண்டனம் தெரிவித்தார். 
 
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்த போதும், கூட்டணி கட்சிகளை ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க வைத்துள்ளோம் என்றும், யாரிடம் சென்று ஓட்டு கேட்கிறோமோ, அவர்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு கொடுப்பது என்பது பாஜகவின் பெருந்தன்மை என்று தெரிவித்தார். 
 
அதேபோல், கூட்டணி கட்சியினருக்கு ராஜ்யசபா சீட்டு வழங்கி, மந்திரி சபையில் இடம் அளிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்