திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த மகேஷ் அரவிந்த், திருமணம் செய்து மோசடி செய்து விட்டதாக அளித்த புகாரின் பேரில் சத்யா கைது செய்யப்பட்டிருந்தார். காவல்துறை விசாரணையில், சத்யாவின் ஏமாற்று வேலையில் மாடு மேய்ப்பவர் முதல் காவல் துறையினர், தொழில் அதிபர் என பலரை திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றியது தெரியவந்தது.
இதை அடுத்து புதுச்சேரியில் பதுங்கி இருந்த சத்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சத்யா ஜாமினில் விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் 60 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், குற்றப்பத்திரிகை இன்னமும் தாக்கல் செய்யவில்லை என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.