அவருக்கு, திருமணத்திற்கு முன்பு, சின்னராசு என்ற ஆட்டோ ஓட்டுனரிடம் அவருக்கு பழக்கம் இருந்துள்ளது. அதன்பின் முருகேஷை அவர் திருமணம் செய்து கொண்டார்.
சம்பவம் நடந்த அன்று, களக்காடு பகுதிக்கு ராமலட்சுமியை வரவழைத்து அவர் மீது ஆசிட் வீசியுள்ளார் சின்னராசு. இதனால் தலை மற்றும் உடலில் ஆசிட் பட்டு, ராமலட்சுமி அலறித் துடித்துள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடலில் 60 சதவீத காயங்களோடு, ராமலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தப்பி ஓடிய சின்னராசுவை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.