சென்னை, தரமணியில், மதுபோதையில் கார் ஓட்டி ஐஸ்வர்யா ஏற்படுத்திய இந்த விபத்தில் முனுசாமி என்ற தொழிலாளி ஒருவர் இறந்தார். இந்த வழக்கில், ஜாமீனில் வெளியே வர ஆடி கார் ஐஸ்வர்யா தீவிரமாக முயற்சித்து வருகிறார்.
தான் பெண் என்பதாலும், கடந்த ஒரு மாத காலமாக சிறையில் இருப்பதாலும் தனக்கு ஜாமீன் வழங்குமாறு ஐஸ்வர்யா தனது மனுவில் கூறியுள்ளார். ஜாமின் மனு தொடர்பாக அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.