ஜெயலலிதா மரண விசாரணை: நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி

புதன், 31 அக்டோபர் 2018 (15:15 IST)
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தற்பொழுது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளதால் அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவர்கள், அமைச்சர்கள் என 100க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடைபெற்றுள்ளது.
 
இதுவரை விசாரணைக் கமிஷனின் காலக்கெடு 3 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்பொழுதும் 4 மாதம் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இந்த விசாரணையை நடத்திவரும் ஆறுமுகசாமி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்