இன்று ஜம்புத் தீவு பிரகடனம் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் எனவும், தமிழர்கள் என்றும் ஒன்றுபட்ட தேசத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் எனவும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
1801 ஆம் ஆண்டு, ஜூன் 16 அன்று, ஆங்கிலேயர்களை எதிர்த்து, மக்கள் அனைவரும் போரிட முன்வர வேண்டும் என்று திருச்சி கோட்டையில் போர்ப் பிரகடனம் செய்தார் சின்ன மருது அவர்கள். ஜாதி மத இன வேறுபாடு களைந்து, மக்கள் அனைவரையும் விடுதலைக்காகப் போராடத் தூண்டியது இந்தப் பிரகடனம்.
இந்திய சுதந்திரப் போரின் முதல் எழுத்துப் பூர்வமான ஜம்புத் தீவுப் பிரகடனம், தமிழர்கள் என்றும் ஒன்றுபட்ட தேசத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் என்பதற்கு, வீரம் நிறைந்த எடுத்துக்காட்டாகும்.