ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன்- அண்ணாமலை

புதன், 14 ஜூன் 2023 (17:44 IST)
சமீபத்தில் பிரபல நாளிதழுக்குப் பேட்டியளித்த அண்ணாமலை, ஜெயலலிதாவை ஊழல்வாதி என்று கூறியதாக தகவல் வெளியானது.

இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது. நேற்று அண்ணாமலைக்கு எதிரான கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனால், பாஜக – அதிமுக இடையேயாப கூட்டணியில் முறிவு ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகப்பெரிய மரியாதை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்,

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  ''நான் பேசியது திரித்துக் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழலில் உள்ளது.  ன்ஒரு குறிப்பிட்ட ஆட்சியைக் கடந்து ஊழல் பிரச்சனையாக உள்ளது. ஊழலுக்கு எதிரான என் போராட்டம் தொடரும்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''ஜெயலலிதாவின் பெயரை நான் எங்குமே குறிப்பிடவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்