ஒரு முதல்வருக்கு இது அழகா? சிபிஐ குறித்த தமிழக அரசின் முடிவு குறித்து அண்ணாமலை..!

வெள்ளி, 16 ஜூன் 2023 (10:28 IST)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் சிபிஐ விசாரணைக்கு முன் மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. இதனை அடுத்து ஒரு முதல்வருக்கு இது அழகா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். 
 
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் மீது சிபிஐ விசாரணையை கேட்டீர்கள், குரூப் ஒன் தேர்வு முறைகேடுகளில் சிபிஐ விசாரணை, ஸ்மார்ட் சிட்டி ஏலத்திட்டத்தில் சிபிஐ விசாரணை, பொள்ளாச்சி பாலியல் பயங்கரம் குறித்து சிபிஐ விசாரணை, அதிமுக எம்எல்ஏக்கள் லஞ்சம் கொடுத்தது குறித்த வழக்கில் சிபிஐ விசாரணை, ஆர் கே நகர் தேர்தல் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை, நீட் தேர்வில் ஆல்மாராட்டம் குறித்து சிபிஐ விசாரணை, தூத்துக்குடியில் லாக்கப் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணை
 
இவ்வளவு பிரச்சனைகளில் சிபிஐ விசாரணைக்கு  எதிர்க்கட்சியாக இருக்கும் போது கோரிக்கை விடுத்த முக ஸ்டாலின் தற்போது முதல்வராக இருக்கும்போது சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் அனுமதி தேவை என்று சொல்வது ஒரு முதல்வருக்கு அழகா என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்