படகில் சென்று பாசம் காட்டிய அண்ணாமலை: மக்களுக்காகவா? பப்லிசிடிக்காகவா?

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (11:03 IST)
பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை படகில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை கேட்டறிந்தார். 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்து நான்கு நாட்கள் ஆகியும் சில இடங்களில் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.  
 
மழை சூழ்ந்துள்ள பகுதிகளை அனைத்து அரசியல் கட்சியினரும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை படகில் சென்று மக்களுக்கு தேவையானதை கேட்டறிந்தார். 
ஆம், சென்னையில் நடந்து செல்லும் நிலையில் தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் படகில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறுவது போன்று படகுடன் சென்ற பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய ஷூட்டிங் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
 
அதாவது எளிதில் மக்கள் நடந்து செல்ல முடியும் என்று நிலையில் உள்ள இடத்தில் மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவது போல வீடியோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த வீடியோவை அவருடன் சென்ற ஒருவர் வெளியிட்டுள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் கிண்டலுக்குள்ளாகியுள்ளது. 
 
ஆனால், சென்னையில் மழைநீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்களில் முழுவதுமாக அகற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதிலும் வெள்ளத்தில் மூழ்கிய 14 சுரங்கப்பாதைகளில் மழைநீர் முழுவதுமாக அகற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்