இண்டர்வியூ முடிஞ்சிட்டு, எக்ஸாம் முடியலையே! – பொறியியல் மாணவர்களுக்கு தீர்வு!

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (11:38 IST)
பொறியியல் இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளதால் மாணவர்கல் வேலைக்கு செல்ல முடியாத சூழலை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைகழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கல்லூரிகள் மற்றும் பல்கலைகழக மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகள் நடைபெறவில்லை. பொறியியல் மாணவர்கள் பலர் கேம்பஸ் இண்டர்வ்யூ, தனிப்பட்ட வேலைவாய்ப்பு முயற்சிகள் மூலம் பணிக்கு தகுதி பெற்றுள்ள போதிலும், இறுதியாண்டு தேர்வுகள் முடிவடையாததால் பணிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி 5 அலகுகளுக்கு பதிலாக 4 அலகுகளுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும் என பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. மேலும் 30 சதவீத மதிப்பெண்களுடன் ஆன்லைனில் ஒருமணி நேர தேர்வு நடத்த இருப்பதாகவும், ஆன்லைன் தேர்வு எழுத முடியாதவர்களுக்கு நேரடி தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்