மீனவர்கள் என்னை தூக்கி சென்றது ஏன்? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (19:10 IST)
மீனவர்கள் என்னை தூக்கி சென்றது ஏன்? அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம்
மீனவர்கள் என்னை தூக்கிச் சென்றது ஏன் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார் 
 
தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று பழவேற்காடு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் அப்போது அவர் படகில் இருந்து கீழே இறங்கிய போது அவரை மீனவர் ஒருவர் தூக்கிக் கொண்டு வந்து கால் தண்ணீரில் படாமல் கரையில் இறக்கினார்
 
அவரது செருப்பு தண்ணீரில் படக்கூடாது என்பதற்காக அமைச்சரை மீனவர் ஒருவர் தூக்கிக் கொண்டு செல்லுமாறு கூறியதாக குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்த வீடியோவை இணையதளங்களில் வைரலானது
 
ஆனால் இது குறித்து விளக்கமளித்த அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் ’நான் யாரையும் தூக்கி கொண்டு செல்ல சொல்லவில்லை என்றும் அன்பு மிகுதியால் மீனவர்களை என்னை தூக்கிக் கொண்டு சென்றார்கள் என்றும் இத்தனை ஆண்டுகளில் பழவேற்காடு பகுதியில் ஆய்வு செய்ய வந்த அமைச்சர் நீங்கள் ஒருவர்தான் என்று என்னை மீனவர்கள் பாராட்டினார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்