கொரோனாவின் மோசமான முகம் சமூக பரவல்: எச்சரிக்கும் அன்புமணி!

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (15:37 IST)
இந்தியா கொரோனா வைரஸ் 3 ஆம் கட்டமான சமூக பரவலின் விளிம்பில் இருப்பதாக அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
கொரோனா பரவல் 3வது கட்டத்தை எட்டிவிட்டதா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், தமிழகத்தை பொருத்தவரை கொரோனா பரவல் இரண்டாவது கட்டத்தில் தான் உள்ளது என விளக்கமளித்தார். 
 
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் இந்தியாவில் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்றின் 3 ஆம் கட்டமான சமூக பரவல் துவங்கிவிட்டதாக மத்திய அரசின் கொரோனா தடுப்பு பணிக்குழு உறுப்பினர் தெரிவித்ததாக தகவல் வெளியிட்டுள்ளார். 
 
கொரோனா இரண்டாம் கட்டம் என்பது உள்நாட்டு பரவல், அதாவது வெளியில் இருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவுவது. இதேபோல கொரோனா மூன்றாம் கட்டம் என்பது சமூக பரவல், அதாவது உள்நாட்டிற்குள் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவது ஆகும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்