ரஜினிகாந்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் - அன்புமணி ராமதாஸ் அதிரடி

Webdunia
புதன், 7 ஜூன் 2017 (16:52 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.


 

 
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. ஒரு பக்கம் பாஜக தங்கள் கட்சிக்கு ரஜினியை அழைத்து வந்தாலும் ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்பதையே ரஜினியை சுற்றியிருப்பவர்கள் நினைக்கிறார்கள். 
 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்த அன்புமணி ராமதாஸ் “ரஜினிகாந்த அரசியலுக்கு வந்தால் எடுபடாது. அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே, அவர் அரசியலுக்கு வராமல் இருப்பது நல்லது” என  தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்