அங்கு சென்று தன் பையிலிருந்த பாம்பை வெளியே எடுத்தார். பாம்பை பார்த்த ஊழியர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினார்கள். பின்னர் தம்மை பாம்பு கடித்துவிட்டதாகவும், அதனால் தான் பாம்பை எடுத்து வந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து மருத்துவர்கள் அந்த பாம்பு எந்த வகையை சேர்ந்தது என அறிந்து, அந்த முதியவருக்கு சிகிச்சை கொடுத்தனர். அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள தெரிவித்துள்ளனர். மேலும் முதியவர் எடுத்து வந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. இதனால் சற்று நேரம் மருத்துவமனையே களோபரமாகிவிட்டது.