இதனையடுத்து 8 பேர் கொண்ட கும்பல் மைதானத்துக்குள் புகுந்து அமித் பண்டாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கையில் வைத்திருந்த கம்பி,கிரிக்கெட் மட்டையால் பலமாக தாக்கினர்.அவ்விடத்திலேயே பண்டாரி கீழே சரிந்தார்.பின்னர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுசம்பந்தமாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில் 23 வயதுக்குட்பட்ட அணி தேர்வில் அனுஜ் தேடா என்பவர் தேர்வு செய்யப்படாததால், ஆத்திரத்தில் ஒரு கும்பலை ஏற்பாடு செய்து பண்டாரி மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.