அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்து திமுக ஆட்சி தற்போது தொடர உள்ள நிலையில் அம்மா உணவகம் பெயர் மாற்றம் செய்யப்படலாம் என்று செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அம்மா உணவகம் பெயர் பலகையை தூக்கி எறிந்த திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் தற்போது ஜாமீனில் உடனே வெளி வந்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் திமுகவினர் பலரும் அம்மா உணவகம் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக தலைமை இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கருணாநிதி, ஸ்டாலின் பெயரை வந்தால் பிரச்சனை ஏற்படும் என்றும் அதனால் அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் பொதுவான தலைவரான அண்ணா பெயரை வைத்தால் எந்த பிரச்சனையும் வராது என்றும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன