ரஜினி பட நடிகையின் தந்தைக்கு கொரொனா ! ரசிகர்கள் அதிர்ச்சி

செவ்வாய், 4 மே 2021 (17:32 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர்.

இந்நிலையில், ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ்,  ரஜினியின் கோச்சடையான்  போன்ற படங்களில் நடித்துள்ள இந்தி சினிமாவின் முன்னணி நடிகையும் நடிகர் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோனின் அப்பாவுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் படுகோன். இவர் முனாள் பாட்மிண்டன் வீரர் ஆவார். இவரது மகள் இந்தி சினிமாவில் முன்னணி நடிகை தீபிகா படுகோன் ஆவார்.

பெங்களூரில் வசித்து வரும் பிரகாஷ் படுகோன் (68)தற்போது  கொரொனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் உடலி அதிக வெப்பம் உள்ளதால் பிரகாஷ் படுகோன் மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவர் விரையில் வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகிறது.,

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்