ரஜினியை வாழ்த்தி தமிழில் டுவிட் போட்ட அமித்ஷா!

Webdunia
வியாழன், 1 ஏப்ரல் 2021 (19:41 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று காலை திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்பட பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் 
 
இந்த நிலையில் சற்று முன்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
 
ரஜினியை வாழ்த்தி தமிழில் டுவிட் போட்ட அமித்ஷா!
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஆளுமை மிக்கவர் அவரது நடிப்புக்கும் திறமைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களோடு நானும் இணைந்து தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் அவர்களை வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்
 
இன்று தமிழகம் மற்றும் புதுவையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் அமித்ஷா, ரஜினிக்கு தமிழில் வாழ்த்து டுவிட் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்