முடிந்தது அல்லு அர்ஜூன் - சமந்தா பாடல்: விரைவில் ரிலீஸ்!

செவ்வாய், 30 நவம்பர் 2021 (19:51 IST)
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தில் சமந்தா ஆடும் நடனம் ஒன்றின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பது தெரிந்ததே
 
அல்லு அர்ஜுன் மற்றும் சமந்தா இணைந்து ஆடும் இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் இந்த பாடல் சிங்கிள் பாடலாக இன்னும் ஓரிரு நாளில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
நடிகை சமந்தா விவாகரத்து அறிவிப்புக்கு பின் முதல்முறையாக இந்த பாடலின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்