அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

திங்கள், 29 நவம்பர் 2021 (11:14 IST)
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த மிகப்பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘புஷ்பா’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
வரும் டிசம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ‘புஷ்பா’ படத்தின் டிரைலர் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ரூபாய் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார்கள்.. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்