தமிழகத்தில் நாளை முதல் ஏசி பேருந்துகள் இயக்கம்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (10:20 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஏசி பேருந்துகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மீண்டும் அவை இயங்க உள்ளன.

தமிழகத்தில் மாவட்டங்களுக்கிடையே தமிழக போக்குவரத்து கழக்கத்திற்கு சொந்தமான ஏ.சி பேருந்துகள் செயல்பட்டு வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஏ.சி பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இப்போது பாதிப்பு குறைந்து அரசு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில் குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் குளிர்சாதன சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்காக பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்