உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்க - விஜயபாஸ்கர்

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2019 (21:38 IST)
நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள் என்றும், வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டுமென்றும் தவறாமல் அனைவரும்  வாக்களிக்க வேண்டுமென்றும் -  கரூரில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் வாக்களித்த பின்னர் பேட்டியளித்தார்.
 

கரூர்  ஆண்டாங்  கோயில்  கிழக்கு ஊராட்சி,  அரசு உயர்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 19 இல் தமிழக போக்குவரத்துறை அமைச்சரும், கரூர் தொகுதியின் எம்.எல்.ஏவுமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்களித்தார். அப்போது அவரது இடது கை ஆள்காட்டி விரலில் அளவுக்கதிகமாக மை  வைக்கப்பட்டது. இதே போல அனைத்து வாக்காளர்களின் விரல்களிலும் அதிகளவு வைக்கப்பட்டது. 

இதனால் அவர்  உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் மை வைப்பதற்கென்று  தனியாக  உள்ள  குச்சியில் மட்டும் மை வைக்கவேண்டும் என்றும் பட்ஸ் எனப்படும் காது குடையும் பஞ்சு குச்சியில்  வைக்கக் கூடாது.  இதனால்  மை வாக்குச்சீட்டில் பட்டு ஓட்டு எண்ணிக்கையின்  போது  பிரச்சனை ஏற்படும்  என்றார். தொடர்ந்து மாவட்ட  தேர்தல் நடத்தும்  அலுவலரும்,  மாவட்ட ஆட்சியருமான  அன்பழகனிடம்  தொலைபேசியில்  அமைச்சர் நேரிடையாக தொடர்பு கொண்டு, இது குறித்து அவர்  பேசினார்.

தொடர்ந்து  அவர் செய்தியாளர்களை  சந்தித்த போது., அவர், பேசிய போது, தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஒ.பி.எஸ் ம், திறம்பட ஆட்சி நடத்தி வருகின்றனர்.

ஆகவே தமிழக அளவில் அ.தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி கட்சியினை சார்ந்த தே.மு.தி.க., பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட ஏராளமான கட்சியினரும் ஏராளமானோர் மிகுந்த வாக்குவித்யாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். எம்.எல்.ஏ & எம்.பி தேர்தலில் கூட 100 சதவிகிதம் கேமிரா மாட்டுவது கிடையாது என்றும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் கேமிரா மாட்டப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்