மாறுவேடத்தில் தப்பி ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.

Webdunia
திங்கள், 13 பிப்ரவரி 2017 (22:06 IST)
இன்று ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு தெரிவித்த மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் இருந்து மாறுவேடத்தில் தப்பி வந்ததாக தெரிவித்துள்ளார்.


 

 
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து அடைத்து வைக்கப்படுள்ளதாக ஓ.பி.எஸ். ஆளுநரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து நேற்று மாலை சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் சசிகலாவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.
 
இதன்மூலம் சசிகலா ஊடகங்களுக்கு, அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் யாரும் அடைத்து வைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் தற்போது இன்று ஓ.பி.எஸ். அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் கூவத்துர் நட்சத்திர விடுதியில் இருந்து இன்று பிற்பகல் மாறுவேடம் போட்டு தப்பி வந்ததாக கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்