1871ம் ஆண்டுக்கு பிறகு பெய்த கனமழை.. நெல்லையப்பர் கோவிலுக்குள் புகுந்த வெள்ளம்..!

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2023 (06:54 IST)
150 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில் மிக கனமழை பெய்து வருவதை அடுத்து அங்கு தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் குறிப்பாக நெல்லையப்பர் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

நெல்லையில் கடந்த 1871 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 30 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில் 150 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று 30 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது. 150 ஆண்டுகளில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளதை அடுத்து நெல்லையே மிதக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது

குறிப்பாக  நெல்லையின் முக்கிய பகுதியான நெல்லையப்பர் கோவிலில் சுற்றி தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

இந்த நிலையில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மீட்பு பணியினர் கொண்டு செல்வதாகவும்,  வெள்ள நேரத்திலும் பொது மக்களுக்கு பால் உட்பட அத்தியாவசியமான பொருட்கள் கிடைப்பதற்கு  உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்