சட்டசபையில் அமைச்சரை எதிர்த்த அதிமுக எம்எல்ஏ!

புதன், 10 ஜனவரி 2018 (15:34 IST)
நடந்து வரும் தமிழக சட்டசபை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிய போது அதிமுக எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அவரை எதிர்த்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தினகரனின் வருகை, ஓகி புயல், போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம், ஆளுநரின் நடவடிக்கை என தமிழக சட்டசபை விறுவிறுப்பாக செல்கிறது.
 
இந்நிலையில் இன்று சட்டசபையில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் குறித்து பேசினார். அப்போது ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த தேவையில்லை என்று அமைச்சர் கூறினார்.
 
அமைச்சரின் இந்த பேச்சுக்கு அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். விஜயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும். அந்த சுகாதார நிலையம் நல்ல நிலையில் இல்லை என கூறினார். மேலும் அமைச்சர் விஜபாஸ்கரின் விளக்கம் திருப்தியாக இல்லை எனவும் தோப்பு வெங்கடாசலம் குறிப்பிட்டார். தோப்பு வெங்கடாசலத்தின் இந்த பேச்சுக்கு எதிராக மற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூச்சல் போட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்