இணையமைச்சர் பதவிக்கு கூட அதிமுக வொர்த் இல்லாம போச்சா...

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (12:28 IST)
மோடி தலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை என்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அப்போது அவருடன் அவரது தலைமையிலான அமைச்சரவையில் 25 கேபினேட் அமைச்சர்கள், 24 இணையமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். 
 
பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகளான சிவசேனா, அகாலிதனம் உள்ளிட்ட கூட்டணிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் அல்லது அதிமுக மூத்த தலைவர் வைத்தியலிங்கம் அமைச்சரவையில் இடம்பிடிப்பர் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. 
ஆனால், கேரளாவில் இருந்து பாஜக சார்பில் யாரும் தேர்வாகாத நிலையில் அம்மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் முரளிதரன் இணையமைச்சராக பதவியேற்றார். 
 
இந்நிலையில், மத்திய அமைச்சர் பதவி எதிர்பார்த்து அது கிடைக்கவில்லை. அட்லீஸ்ட் இணையமைச்சர் பதவியாவது யாரேனும் ஒருவருக்கு கொடுத்திருக்கலாம் என அதிமுகவில் ஆதங்க குரலும் எழுந்துள்ளது. 

இருப்பினும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது நிச்சயம் அதிமுகவில் இருந்து ஒருவருக்கு வாய்ப்பு வழக்கப்படும் என அதிமுக அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்