ஆளுனர் வாகனம் தாக்குதல் சம்பவம் – சட்டசபையில் அதிமுக, பாஜக வெளிநடப்பு!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (12:27 IST)
ஆளுனர் சென்ற வாகன அணிவகுப்பு மீது தாக்குதல் நடந்ததாக கண்டனம் தெரிவித்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்துள்ளது.

நேற்று மயிலாடுதுறை சென்ற ஆளுனரின் கார் அணிவகுப்பின் மீது போராட்டக்காரர்கள் கொடிகளை வீசியதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள் எந்த கொடியையும், கற்களையும் வீசவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னர் வாகன தாக்குதல் சம்பவத்தை கண்டித்து அதிமுக, பாஜக கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதுகுறித்து விளக்கமளித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுனர் சென்ற கார் அணிவகுப்பின் மீது தாக்குதல் நடைபெறவில்லை என ஆளுனரின் தனி உதவியாளரும், காவல்துறையினரும் தெரிவித்துள்ளதாகவும், எதிர்கட்சிகள் அவசியமின்றி வெளிநடப்பு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்