செந்தில் பாலாஜியை தோற்கடிக்க கைகோர்க்கும் அதிமுக-அமமுக?

Webdunia
ஞாயிறு, 28 ஏப்ரல் 2019 (09:24 IST)
அதிமுகவும், அமமுகவும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தாலும் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள 'அரவக்குறிச்சி' இடைத்தேர்தலில் மட்டும் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
செந்தில்பாலாஜி திடீரென திமுகவுக்கு தாவியது டிடிவி தினகரனை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியதால் செந்தில் பாலாஜியை தோற்கடிக்க அமமுகவினர்களும் அதிமுகவுடன் கைகோர்க்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் செந்தில் பாலாஜியின் அதிருப்தியாளர்கள் அனைவரையும் அவருக்கு எதிராக களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாம்
 
மேலும் செந்தில் பாலாஜி, தேர்தலுக்கு முந்தைய நாள் பணப்பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அந்த சமயம் விழிப்புடன் இருந்து கையும் களவுமாக பிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், முடிந்தால் தேர்தலை நிறுத்தவும் திட்டமிடப்பட்டு வருவதாகவும் உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கின்றன.
 
ஆனால் எத்தனை பேர் தனக்கு எதிராக கைகோர்த்தாலும் திமுக தொண்டர்களின் ஒத்துழைப்பால் தான் வெற்றி பெறுவது உறுதி என்று செந்தில்பாலாஜி கூறி வருகின்றாராம்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்