மெரினாவில் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் விஜய்: முகத்தில் துணியை கட்டிக்கொண்டு பங்கேற்ற ஆச்சரியம்!

Webdunia
சனி, 21 ஜனவரி 2017 (09:48 IST)
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தில் நேற்று 4 லட்சம் பேர் கலந்துகொண்டதாக தகவல்கள் வருகின்றன.


 
 
எந்த வித அரசியல் கட்சிகளும் இல்லாமல் தன்னெழுச்சியாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்களோ, பிரபல நடிகர்களோ வந்தால் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் விரட்டுகிறார்கள்.
 
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தில் மக்கள் கூட்டத்தில் நடிகர் விஜய் மறைமுகமாக கலந்துகொண்டுள்ளார். மெரினாவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் நடிகர்கள் யாரையும் அனுமதிக்கமாட்டோம் என ஆரம்பம் முதலே மாணவர்கள் கூறி வந்தனர்.


 
 
ஆனால் நேற்று நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் விஜய் கலந்துகொள்ளாமல் மெரினாவில் இளைஞர்களும் மாணவர்களும் நடத்தும் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
 
போராட்டத்தில் தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக, தனது முகத்தில் துணியை கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக நின்றுள்ளார். ஆனால் அவர் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு நின்ற புகைப்படங்கள் எப்படியோ வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்