கெட்ட வார்த்தையில் திட்டிய இன்ஸ்பெக்டர்: விரக்தியில் தற்கொலைக்கு முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (12:09 IST)
கொடைக்கானலில் இன்ஸ்பெக்டர் ஒருமையில் திட்டியதால் மனமுடைந்த சப்- இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கொடைக்கானல் தாண்டிக்குடி போலீஸ் ஸ்டேஷனில் தேனியை சேர்ந்த சுபகுமார் என்பவர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களையும் கீழ்த்தரமாக ஒருமையில் திட்டி வந்துள்ளார். இதனை சகித்துக் கொண்டு காவலர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு சுபகுமார், சப் - இன்ஸ்பெக்டர் முருகேசனை ஒருமையில் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த முருகேசன் காவல் நிலையத்தில் இருந்த நோட்டீஸ் போர்டில் என் தற்கொலைக்கு காரணம் சுபகுமார் என எழுதிவைத்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 
ஆனால் சக ஊழியர்கள் அவரை தற்கொலையிலிருந்து காப்பாற்றிவிட்டனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அவதூறாக நடந்து கொண்ட சுபகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  கொடைக்கானல் டி.எஸ்.பி. தெரிவித்துள்ளார். போலீஸ்காரர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்