குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்தவர் கைது..

Arun Prasath
வியாழன், 12 டிசம்பர் 2019 (11:27 IST)
குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ததாக திருச்சியை சேர்ந்த ஏசி மெக்கானிக் கைது.

தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பரப்புவது, இண்டெர்நெட்டில் இருந்து டவுன்லோட் செய்வது, பதிவேற்றம் செய்வது ஆகியவை குற்றம் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரி எம்.ரவி சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் ராஜ் என்ற ஏ.சி.மெக்கானிக் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் போலி கணக்கில் ஆபாச படங்களை பதவியேற்றம் செய்ததாக கூறப்படுகிறது. தற்போது கிறிஸ்டோபரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்