80 பெண்களை மிரட்டி கற்பழிப்பு: சென்னையில் ஐடி வாலிபர் கைது

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (09:25 IST)
சென்னையில் 80க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி கற்பழித்த ஐடி வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் வீட்டில் புகுந்து பெண்களை கற்பழித்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளை நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் நகை மற்றுமே காணாமல் போனதாக புகார் அளித்தனர்.
 
ஆனால் வேளச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் மட்டும் தைரியமாக புகார் அளித்தார். புகாரின் பேரில் களத்தில் இறங்கிய போலீஸார் சிசிடிவி கேமராவை கொண்டு விசாரித்ததில் அந்த அயோக்கியனின் முகம் கிடைத்தது. இதை வைத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
 
இந்நிலையில் அந்த காம மிருகம் போலீஸாரின் தேடுதல் வேட்டையில் சிக்கினான். அவனை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் கிராமத்தை சேர்ந்த அவனது பெயர் அறிவழகன். எம்.பி.ஏ முடித்த இவன் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலைபுரிந்து வந்தான். அங்கு வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிட்டு அவர்களின் வீட்டுக்குள் புகுந்து அவர்களை கற்பழிப்பான். பின்னர் அவர்களிடமிருந்து நகைகளை பறித்து செல்வான். இதையே வாடிக்கையாக வைத்துள்ளான். பெங்களூர் போலீஸார் இவனை நெருங்குவதை அறிந்த இவன் சென்னைக்கு தப்பித்து வந்துள்ளான்.
 
சென்னைக்கு வந்த இவன் பகலில், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடுவான். பின்னர் அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து பெண்களை கற்பழித்து அவர்களிடமிருந்து நகை பணத்தை பறித்து செல்வான். திருசிய பணத்தில் உல்லாச அழகிகள், மது என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறான். இவ்வாறி இதுவரை 80 பெண்களை கற்பழித்துள்ளானாம் இவன். இவனின் பின்னணியை கேட்ட போலீஸாரே அதிர்ந்து போய்விட்டனர்.
 
போலீஸார் அவனிடம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்னை வாசிகளை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்