கைவீசி போன குழந்தையை கடித்து குதறிய நாய்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (13:20 IST)
ராமநாதபுரத்தில் 3 வயது பெண் குழந்தையை தெரு நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள  ஓம் சக்தி நகரில் வசித்து வருபவர் பாலமுருகன். இவருக்கு ஸ்டெர்லின் என்ற 3 வயது மகள் இருக்கிறாள்.
 
தினமும் தன் வீட்டின் முன் விளையாடும் ஸ்டெர்லின் நேற்றும் விளையாடிக் கொண்டிருக்கும் போது, அங்கு சுற்றிக்கொண்டிருந்த தெரு நாய் ஒன்று ஸ்டெர்லின் கன்னத்தில் கடித்தவுடன் ஓடி விட்டது.
 
இதைக்கண்ட பாலமுருகன் தன் மகளை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். தற்போது ஸ்டெர்லின் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
பகல் இரவு  வேளைகளில் சுத்திக்கொண்டு திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என ராமநாதபுரம் மக்கள் உள்ளாட்சியில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்