காரிருளில் மூழ்கிய சென்னை: மின்சாரம் துண்டிப்பு!!

Webdunia
புதன், 25 நவம்பர் 2020 (14:26 IST)
நிவர் புயல் காரணமாக சென்னையில் 70% இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

 
 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருமாறியுள்ளது. தீவிர புயலாக உள்ள நிவர் கரையை கடக்கும் முன்னர் அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு தொடங்கி விடியும் வரை புயல் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தலைநகர் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை கடற்கரையில் மழை மேகங்கள் சூழ்ந்து வரும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ளது நிவர் புயல். 
 
இந்நிலையில், சென்னையில் 70% இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக ஏற்படும் விபத்தை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு மின்வாரியம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்