சென்னையில் மினி பஸ் சேவையில் சுணக்கம்… 70 பஸ்கள் வரை நிறுத்தம்!

சனி, 30 ஜனவரி 2021 (09:52 IST)
சென்னையில் இயக்கப்பட்டு வந்த மினிபஸ் சேவையில் 70 பஸ்கள் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைநகர் சென்னையில் மினிபஸ் சேவையை தொடங்கிவைத்தார். நகரின் உள் பகுதிகளில் குறுகலான தெருக்கள் இருக்கும் பகுதிகளில் இதுபோல 200 பஸ்கள் வரை இயக்கப்பட்டன. ஆனால் முதலில் இந்த மினிபஸ்களுக்குக் கிடைத்த வரவேற்பு தற்போது இல்லை என சொல்லப்படுகிறது. அதிலும் கொரோனா லாக்டவுன் காலத்துக்கு பிறகு நிறைய வழித்தடங்களில் சுத்தமாகக் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது பயணிகள் ஆதரவு இல்லாத 70 மினி பஸ்களை நிறுத்தியுள்ளது சென்னை மாநகராட்சி. பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்ட பின்னரும் நிலைமை சரியான பின்னரும் மீண்டும் முழு அளவில் இந்த பேருந்துகள் இயக்கப்படும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்