தினகரனுக்கு 60 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்காம்: மேலும் 24 பேர் தயார் நிலையில்!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (12:31 IST)
அதிமுகவில் டிடிவி தினகரனை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்த பின்னர் தனது செல்வாக்கை காட்ட தினகரன் தனக்கென ஒரு அணியை உருவாக்கி எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.


 
 
இதுவரை தினகரனை முப்பதுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சென்று சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன் நம்ம பக்கம் 60 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறியதாக தகவல்கள் வருகின்றன.
 
டிடிவி தினகரன் நேற்று சசிகலாவை பெங்களூர் சிறையில் சென்று சந்தித்தார். அப்போது அவர் எடப்பாடி பழனிச்சாமி மீதும், சில அமைச்சர்கள் மீதும் சசிகலாவிடம் புகார் அளித்துள்ளார். தங்கள் தரப்பு கோரிக்கைகள் எதையுமே எடப்பாடி செய்து தருவதில்லை என கூறியதாக தெரிகிறது.
 
மேலும் இதுவரை 35 எம்எல்ஏக்கள் தனக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், மேலும் 24 எம்எல்ஏக்கள் எந்த நேரத்திலும் வர தயாராக இருப்பதாகவும், ஆக கிட்டத்தட்ட 60 எம்எல்ஏக்கள் தனக்கு ஆதரவான மனநிலையில் உள்ளதாக தினகரன் கூறியதாக தகவல்கள் வருகின்றன.
அடுத்த கட்டுரையில்