மூடப்படுகிறது 500 டாஸ்மாக் கடைகள்: கணக்கெடுக்கும் பணி தொடக்கம் என தகவல்..!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (13:53 IST)
தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்பட இருப்பதாகவும் மூடப்பட இருக்கும் கடைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
திமுக ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது என்றும் தெரிந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில் தமிழகத்தில் விரைவில் 500 டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுக்கும் பணி தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. தொழில்முறை, 50 மீட்டருக்குள் இருக்கக்கூடிய கடைகள், வருவாய் குறைவாக உள்ள கடைகள் உள்ளிட்ட காரணிகள் அடிப்படையில் 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த தேர்வு பணி முடிந்தவுடன் அந்த கடைகளை மூடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்