சமீபத்தில்தான் கோடையின் கத்தரி வெய்யில்,அன்னி வெயில் எல்லாம் முடிந்தது. ஆனால் வெய்யில் தான் ஓய்ந்தபாடில்லை. தென்மேற்று பருவமழை கேரளா உட்பட பல மாநிலங்களில் பெய்துவரும் நிலையில் பல மாநிலங்களில் வெய்யிலும் இன்னும் குறைந்தபாடில்லை.
.
இந்நிலையில் பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் கொளுத்தும் வெயில் காரணமாக ஒரே நாளில் 30 பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுசம்பந்தமாக பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் கூறுகையில் : வெயில் தாக்கத்தால் பலர் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.ஆனால் அவர்களில் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.மேலும் சிலருக்கு மயக்கம் உள்ளது,சில மனநிலை தடுமாற்றத்துடன் உள்ளனர்.
அதனால் இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறினார்.
இதனையடுத்து வெயிலால் பாதிக்கப்பட்டு பலியான குடும்பத்திற்கு மாநில அரசு சார்பில் ரூ. 4லட்சம் தரப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.