நெல்லை அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிடிபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சேர்ந்தவர் கண்ணன் (எ) ஹாலித் (43). இவர் மீது பல வழக்குகள் உள்ளது. இவர் சங்கரன்கோவில் புதிய பஸ்நிலையம் அருகில் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனம் நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று இவர் அலுவலகத்தில் இருந்த போது, கார்களில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக கண்ணனை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
இந்த வழக்கில் கோரம்பள்ளம் தெற்குதெரு ராஜேஷ் (எ) ராஜேஷ்வரன் (27), குரும்பூர் அருகே தண்டையார்விளையை சேர்ந்த ஜேசுபாலன் (27), குலையன் கரிசல் நடுத்தெருவை சேர்ந்த இளையராஜா (25) ஆகியோரை சங்கரன்கோவில் டவுன் போலீசார் கைதுசெய்தனர்.
இந்நிலையில் எஸ்பி விக்ரமன், சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜாராம் பரிந்துரையின் பேரில் கைதான 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.