குறிப்பாக சென்னை அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, வடபழனி, கிண்டி, ஆலந்தூர், மடிப்பாக்கம், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் காலையிலிருந்து விட்டுவிட்டு நல்ல மழை பெய்து வருகிறது. இன்று முற்பகல் வரை சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
2020ஆம் ஆண்டின் முதல் நாளே மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் வருணபகவான் சென்னைக்கு மழையை பொழிந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதல் சென்னைவாசிகள் தங்கள் வீடுகளில் இருந்து மழையை ரசித்து வருகின்றனர். மழையுடன் தொடங்கிய இன்றைய புத்தாண்டு ஆண்டு முழுவதும் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று எதிர்பார்ப்போம்