கோவை சாய்பாபா காலனி சேர்ந்தவர் கோவை தங்கம். இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளார் விஷ்ணு வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் அவரது மகள் சத்யா தொழிலதிபராக இருந்து வருகிறார். இந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் இருந்துள்ளார். அதன் பின்னர் மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் மாநில காங்கிரஸ் துணைத் தலைவராகவும் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகவும் பணியாற்றி வந்தார்.
15 நாட்களுக்கு முன்பு தொண்டையில் சிறிய பொன் ஏற்பட்டுள்ளதால் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை 12.30 மணிக்கு மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது இதனை அடுத்து திமுக தொண்டர்கள் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.