அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (14:42 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி தஞ்சை, நாகை, திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் என 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்