தமிழகத்தின் நிதிநிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியீடு

திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (12:02 IST)
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 

 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியாகியுள்ள வெள்ளை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு... 
 
2011 ஆம் அதிமுக ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாடு அரசின் கடன் சுமை ரூ.1.14 லட்சம் கோடியாக இருந்தது. 2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.  2021 ஆம் ஆண்டு அதிமுக அரசன் 10 ஆண்டு முடிவில் தமிழ்நாட்டின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது.
 
தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், நினைத்துப் பார்க்க முடியாத அளவில் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடனை வாங்கி கட்டாயச் செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதிநிலைமை சரிந்துவிட்டது. 5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்