தமிழகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முறை சமீபத்தில் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் ஏறத்தாழ பல கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசிய மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது,
பேரிடர் காலத்தில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக சுகாதாரத் துறையில் தமிழகம் திகழ்கிறது. மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் தொடங்கப்பட்டு மூன்று நாட்களிலேயே 25,617 பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை.