சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 102 கிலோ கஞ்சா கடத்திய மூன்று நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை - திருச்சி இடையே செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சாவை
சிலர் அடிக்கடி கடத்தி வருவதாக போலீருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் தீவிரமாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் மூன்று பேர் பயணம் செய்தனர். அவர்களை சோதனை செய்த போது, அவர்களிடம்
சுமார் 102 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, அந்த 102 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கஞ்சா கடத்திய மலைச்சாமி, சரோஜா உள்பட 3 பேரை கைது செய்தனர்.