நாள்தோறும் 100 கொடிக் கம்பங்கள் நடப்படும் - அண்ணாமலை

Webdunia
சனி, 21 அக்டோபர் 2023 (13:12 IST)
நவம்பர் 1 ஆம் தேதி முதல் நாள்தோறும் 100 கொடிக் கம்பங்கள் நடப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
சென்னை, பனையூரில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன் பாஜகவின் கொடிக்கம்பம் நிறுவப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
அண்ணாமலை வீட்டின் முன் கொடிக்கம்பம் நிறுவப்படுவது இஸ்லாமியர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறியதோடு, கொடிக்கம்பம் நிறுவப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள்  போராட்டம் நடத்தினர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
 
போராட்டத்தை கண்டித்து பாஜகவினர்  எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கொடிக்கம்பம் நிறுவப்படுவதற்கு எந்தவிதமான தீங்கும் இல்லை என்றும், இது ஒரு சாதாரண விஷயம் என்றும் பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
 
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது: நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொடு நாளும் 100  கொடிக்கம்பங்கள் நடப்படும் எனவும் தமிழ்நாட்டில் 100 நாட்களில் 10,000 கொடிக் கம்பங்கள் நடப்படும் என்றும், 100 வது நாளான பிப்ரவரி 8 ஆம் தேதி கொடிக்கம்பம் நடப்படும் என்று கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்