மருத்துவ உயர்கல்வியில் இட ஒதுக்கீடு… இந்த ஆண்டே வேண்டும் – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (11:00 IST)
மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே வழங்கவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடை முறைப்படுத்தப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும். மருத்துவக் கல்வி இடங்களில் இந்த ஆண்டிலேயே #OBC மாணவர்களுக்கான மாநில இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக @PMOIndia உடனடியாகத் தலையிடக் கோரி கடிதம் எழுதியிருக்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

மேலும் தான் எழுதிய கடிதத்தில் ‘அரசியல் மற்றும் கருத்தியல் வேறுபாடுகளைத் தாண்டி நாம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைய வேண்டும்அரசியல் மற்றும் கருத்தியல் வேறுபாடுகளைத் தாண்டி நாம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கல்வி கேள்விக்குள்ளாகும். 50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் - தீர்வு காண வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்