அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2019 (19:21 IST)
அக்டோபர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

மனசாட்சிக்கு பயந்து எதையும் செய்யும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண்செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்துசேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த  நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும்.

உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். கூடுதல் முயற்சி வெற்றிக்கு உதவும். 

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அம்மனுக்கு அரளிப்பூவால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்