நவம்பர் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (19:51 IST)
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

அறிவு நுணுக்கமும் செயல்திறனும் கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் நீங்கும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும்.

கலைத்துறையினருக்கு தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியல்வாதிகள் வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். மாணவர்களுக்கு  கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை
எண்கள்: 1, 5
பரிகாரம்:  நவகிரகத்தில் புதனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்